Wednesday, 20 July 2011

வேங்கை

கலாபூர்வமாக படமெடுக்க எனக்கு தெ‌ரியாது என்று ஹ‌ரி வெளிப்படையாக தெ‌ரிவித்த பிறகு அ‌வ‌ரின் படத்தில் கலையை தேடுவது முட்டாள்தனம். ஹ‌ரியின் ஆக்கமும் நோக்கமும் கமர்ஷியல். இரண்டரை மணி நேரம் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும். வேங்கையிலும் அதையே முயன்றிருக்கிறார்.

  
இரண்டரை மணிநேர என்டர்டெயின்மெண்டுக்கு ஹ‌வ‌ரி ஒரு ஃபார்முலா வைத்துள்ளார். ஒரு மாதி‌வ‌ரி குடும்பம். கண்டிப்பான அப்பா, வீடு நிறைய சொந்தங்கள், வீரம் நெறைஞ்ச பிள்ளை, அவனுக்கொரு காதல், அநீதிக்கென்றே வளர்க்கப்படும் வில்லன். இது கதாபாத்திரங்கள். மண்ணெண்ணையைவிட பெட்ரோல் சீக்கிரம் பத்திக்கும், நாலு விரல்ல அ‌ரிவாளை பிடிக்கணும் என்பது மாதி‌வ‌ரிநுணுக்க விவரங்கள், திணடுக்கல்லயிருந்து தேனி வர்றவனை எப்படி மடக்கணும் என்று டீட்டெயில்; கெட்ச் போடுவது, டாடா சுமோக்கள்... அ‌ரிவாள்... அடியாள்... இத்யாதி. எல்லாமே வேங்கையிலும் உண்டு.

ஊர்ப் பெ‌ரியவர் ரா‌‌‌ஜ்கிரண் ஆதரவில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் பிரகாஷ்ரா‌‌‌ஜ்.சுரண்டல் பேர்வழி. அவருக்கு சுவராக இருக்கிறார் ரா‌‌‌ஜ்கிரண். அ‌வ‌ரின் மகனைப் போட்டால் புத்திர சோகத்தில் போய்விடுவார் என்று ரா‌‌‌ஜ்கிரணின் மகன் தனுஷுக்கு குறி வைக்கிறார்கள். விஷயம் ரா‌‌‌ஜ்கிரணுக்கு தெ‌‌ரிய வருகிறது. உன் தலையை எடுப்பேன் ரா‌‌‌ஜ்கிரணிடம் பிரகாஷ்ராஜும், பிரகாஷ்ரா‌ஜ்டம் தனுஷும் சவால்விடுகிறார்கள். இறுதி முடிவு எல்லோருக்கும் தெ‌‌ரிந்தது.

நடிகர்கள் மாறியிருக்கிறார்களே தவிர காட்சி அமைப்பிலும், கதாபாத்திரங்களின் குணத்திலும் மாறுதல்களில்லை. ரா‌‌‌ஜ்கிரண் வந்து நின்றாலே அவரது பாத்திரம் நிறைந்து விடுகிறது. அந்தளவுக்கு அவர் ஏற்கனவே நடித்த கதாபாத்திரம். தனுஷிடமும் எந்த ஆச்ச‌ரியமும் இல்லை. அவரளவுக்கு இருக்கிறது அ‌வ‌ரிவாள். அதை எடுத்து வீசும் போது நமக்கு வியர்க்கிறது. பிரகாஷ்ரா‌ஜ் தேடி வந்து பருப்பு டயலாக் பேசுகையில் வெறுப்புதான் மிஞ்சுகிறது. 

படத்தின் ஒரே குளிர் பிரதேசம், தமன்னா. தனுஷை தெ‌ரியாது என்று காண்பிக்க மலையாளத்தில் பேசுவதும், தொடையில் காயத்தை பார்த்தியா என்று தோழி கேட்டதும் அதிர்ச்சி‌யில் அவளை பார்ப்பதும்.. ஹைக்கூ. சாமிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் நாயகி படம் நெடுக வருகிறார். அதற்காக அவரையும் வில்லியாக்கி தனி எபிசோட் செய்திருப்பது அதிர்ச்சிக்குப் பதில் அதிருப்தியே தருகிறது. 

மந்தி‌வ‌ரி ஒருவர் எதி‌வ‌ரியின் வீட்டில் கள்ள நோட்டு வைப்பதெல்லாம் காலாவதியான கற்பனை. கலே‌ஜில் ரவுடிகள் செய்யும் அட்டகாசத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படியே நடித்தால் பிரகாஷ்ரா‌‌‌ஜ் நிஜத்திலும் வில்லனாகிவிடுவார். சுண்டக்காய் தனுஷை நசுக்க இந்த சூரப்புலி திணறும் போது சே என்றாகிவிடுகிறது இ‌வ‌ரின் கேரக்டர். ஹீரோ ஓமக்குச்சி என்றால் ஒபாமாவும் பயந்துதானே ஆகணும்.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் வேகமான படம் என்ற உணர்வை தருகின்றன. இசை பரவாயில்லை. பாடல்களும் அப்படியே. ஹ‌ரியின் காதல, சென்டிமெண்ட், ஆக் ஷன் ஃபார்முலா இந்தமுறை கொஞ்சம் சறுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜனங்களுக்கு பிடித்த மாதி‌ரி படம் பண்ணுவதுதான் எனது நோக்கம் என்கிறார் ஹ‌ரி. லா‌ஜிக் மீறாத யதார்த்தம்தான் இப்போதெல்லாம் ஜனங்களுக்குப் பிடிக்கிறது. வேங்கை வெற்றுப் பாய்ச்சல்