Friday, 30 September 2011

மதிகெட்டான் சாலை - விமர்சனம்


Tamil Flim Mathikettan salai

"களவாணி", "முதல்இடம்", பாணியில் தஞ்சாவூர் பகுதியை கதைக்களமாக கொண்ட மற்றுமொரு படம்தான் "மதிகெட்டான் சாலை". ஆனால், இதில் காதல் மட்டும் இல்லை... காதலால் மதிகெட்டவனின் கதையும் புகுத்தப்பட்டிருப்பது புதுமை!!

வீட்டுக்கு அடங்காமல், வேலை வெட்டிஇல்லாமல், வீரமும், விளையாட்டுத்தனமாகவும் திரியும் நான்கு இளைஞர்களும், அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஒருகுடும்பமும் தான் "மதிகெட்டான் சாலை" படத்தின் கதைக்களம். நான்கு இளைஞர்களில் ஒருத்தனுக்கு, சின்ன வயதில் இருந்தே தங்களுக்கு அடைக்கலம் தரும் அந்த குடும்பத்தின் பெண் மீது காதல் வருகிறது. அந்த காதலால் தன் நண்பர்களையும், அந்த குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு பிரிந்து செல்லும் இளைஞன், சேரக்கூடாத இடத்தில் எல்லாம் சேர்ந்து சீரழிவது தான் "மதிகெட்டான் சாலை" மொத்த படமும்! அப்படி சீரழிந்த இளைஞன், படத்தின் நாயகன், இறுதியில் ஒருதலை காதலில் ஜெயித்தானா...? அல்லது காதலி முன் செத்து ஒழிந்தானா...? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸில் வித்தயாசமும், விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருப்பது புதுமை!

கதைநாயகனாக ஆதர்ஷ் எனும் புதுமுகம் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். நடிப்பை விட ஆதர்ஷூக்கு பாட்டும், ஃபைட்டும் பக்காவாக வருகிறது. கதாநாயகி திவ்யா நாகேஷ் இன்னமும் குழந்தை நட்சத்திரமாகவே தெரிவது மைனஸ்!

ஸோலோ காமெடியில் சிங்கமுத்து இளம் மனைவியை இளைஞர்களிடமிருந்து காபந்து செய்யபடும்பாடு செம சிரிப்பு! வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், நரேன், சந்தீப், தமிழ், கிருஷ்ணகுமார், லாவண்யா, ஈரோடு கோபால், சேதுபாரதி, வில்லன் அறிவு, மதன் உள்ளிட்டவர்களும் பளிச் தேர்வு! எஸ்.தாஸின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் இசையும் படத்தின் பெரும் பலம்!

மொத்தத்தில் ஜி.பட்டுராஜனின் எழுத்து-இயக்கத்தில் "மதிகெட்டான் சாலை", ரசிகர்களின் "மதிமயக்கும் சோலை!"

நடிகர் : ஆதர்ஷ்
நடிகை : திவ்யா நாகேஷ்
இயக்குனர் :பட்டுராஜன்





செல்வராகவன் பேட்டி


"மயக்கம் என்ன' படத்தின் கதை இயல்பான வகையை சேர்ந்தது என்றும், இதற்கும் தனது வாழ்க்கைக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
.
தனுஷ் நாயகனாக நடிக்க, செல்வராகவன் மயக்கம் என்ன படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது செல்வராகவன் இந்த படம் பற்றி கூறியதாவது: மயக்கம் என்ன படத்தின் கதை எளிமையானது, இயல்பானது, இந்த கதைக்கும் என் வாழக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தனுஷ் புகைப்பட கலைஞராக வருகிறார். இந்த பாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததால் தான் அவரை நடிக்க வைத்துள்ளேன். ரிச்சா அருவ்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட்டாகி விட்டன.

திரைத்தேடும் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். ஒரு மழை பாடலை நான் எழுதியுள்ளேன். எளிமையான வரிகள் கொண்ட பாடல் தேவைப்பட்டதால் நானும், தனுஷûம் பாடல்களை எழுதியுள்ளோம். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





தேங்க்ஸ் டு நியூ பேப்பர் 

Saturday, 24 September 2011

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்

Tamil Flim Engeyum Epothum



பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ்வுடன் இணைந்து தன் உதவியாளர் எம்.சரவணன் இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தரமான ப(பா)டம் தான் "எங்கேயும்... எப்போதும்..."


கதைப்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் ஆம்னிபேருந்து புறப்படும் அதே நேரத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, அதில் நிலைகுலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தகதை, சோக கதைகளுடன் சில, பல காதல் கதைகளையும், காமெடி காட்சிகளையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, கண்ணீரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் சரவணன். சபாஷ் சரவணன்.


திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பிரயாணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதலாகட்டும், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதலுமாகட்டும், இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பிரியமான ஜோடியின் பிரியமுடியாத காதலாகட்டும், கண்டக்டரின் சதியால் பிரிந்து, பின் இணையும் பேருந்து இளம் காதலர் ஆகட்டும், அந்த சுட்டி குழந்தை ஆகட்டும், அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டும், அரசூர் ஊர் தலைவராகட்டும், அனன்யாவின் அழகு அக்காவாகட்டும், எல்லோருமே நச் என்ற பாத்திரத்தில், பளிச் என்று நடித்து ரசிகர்கள் மனதை டச் செய்து விடுகின்றனர். பலே, பலே!


ஜெய் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.


நாலு வீடு தள்ளி மாடியில் இருந்து கை காட்டும் ஜெய்யை மடக்கி, காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி, ஜெய் உடனான காதலில் நடிக்கவே இல்லை, உண்மையை சொல்வதென்றால் ஜெய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் "நாடோடிகள்" அனன்யா, சர்வாவுடனான காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
ஒவ்‌வொரு காட்சியிலும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஓவியம் என்றால், சத்யாவின் இசை, ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படம் முழுக்க எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன், இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து, க்ளைமாக்ஸில் அந்த ஜோடியை பிரித்து விட்டாரே... இந்த ஜோடியை சேர விடவில்லையே... என எமனையும், இயக்குநர் எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பது தான் "எங்கேயும் எப்போதும்" படத்தின் பெரிய பலம்!



சூப்பர் படம்.. சரவணனுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.... ஜெய்,அஞ்சலி,அனன்யா, மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் பிரமாதம். விபத்துகளின் விளைவுகளை பற்றி மக்களுக்கு எடுத்து கூறியிருப்பது மற்றும் அதிவேகத்தின் ஆபத்துகளை மக்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைத்துள்ளது.. இறந்த பின்பு உடல் உறுப்புகள் தியாகம் செய்யும் காட்சிகள் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ள படம் "எங்கேயும் எப்போதும" ... நன்றி சரவணன்...





 நடிகர் : ஜெய்
      நடிகை : அஞ்சலி
      இயக்குனர் :சரவணன் 




Saturday, 17 September 2011

திரை விமர்சனம்

ஆயுதப்போராட்டம் 


Tamil Flim Ayuthaporatam


வளர்ந்து வரும் நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "ஆயுதப்போராட்டம்". ஆனால் அவரது நடிப்பு அளவிற்கு கூட புதிய அவதாரங்களான எழுத்து, இயக்கம், தயாரிப்பு உள்ளிட்டவைக‌ள் தரமானதாக இல்லாததுதான் ஏமாற்றம்...!

ஒரு நாட்டில் உள்நாட்டு போரில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டு வரும் போராளிகளை ஒழிக்க, மற்றொரு நாட்டின் ஆயுத சப்ளை நிறுவனம் ஆயுதம் வழங்குகிறது. இதனால் பாதிப்பிற்குள்ளாகும் போராளிகள், தங்கள் நாட்டிற்கு வரும் ஆயுத சப்ளை ஊழியர்கள் சிலரை காலி பண்ண களம் இறங்குகின்றனர். வென்றது போராளிகளா...? உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களா...? என்பது க்ளைமாக்ஸ்! இந்த கதையுடன் காதல், ‌காமநெடி, காமெடி எல்லாவற்றையும் கலந்துகட்டி கலக்கலாக கதை சொல்ல முயன்று, படு லோக்கலாக படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெய் ஆகாஷ்! ரசிகர்கள் தான் பாவம்!!

போராளித்தலைவனாகவும், ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களில் ஒருவராகவும் ஹீரோ ஜெய் ஆகாஷ், இதில் டபுள் ஆக்ட் வேறு கொடுத்து வெறுப்பேற்றியிருக்கிறார். ஆனால் அவரது எழுத்து, இயக்கம், இத்யாதி, இத்யாதிகளுக்கு நடிப்பு பெட்டர் என்பது ஆறுதல்! படத்திற்கு "ஆயுதப்போராட்டம்" எனப்பெயர் வைத்துவிட்ட காரணத்தால், பாடல்காட்சிகளில் (மட்டும்) எல்லாம் துப்பாக்கியும் கையுமாக ஜெய், போஸ் கொடுப்பது செம காமெடி!

கதாநாயகிகள் ப்ரீத்தி மீனாள், அனிதாரெட்டி இருவருக்கும் நடிப்பை விட அவிழ்ப்பு(துணி)க்கு வாய்ப்பு அதிகம்! அதை இருவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜெய்யின் அட்டகாசங்களில் இருந்து ரசிகர்களை காபந்து செய்வது ஆறுதல்! தீப்பெட்டி கணேஷ், சாய்கிரன், அதித் சீனிவாஸ், நீரஜ் புரோகித், சித்திரம் பாஷா உள்ளிட்டவர்கள் ஜெய்க்கு பக்கபலமாக இருந்து ரசிகர்களை மேலும் பாடாய்படுத்தி விடுகின்றனர்.

சாய்சதீஷின் ஒளிப்பதிவு, நந்தன் ராஜின் இசை எல்லாம் நன்றாக இருந்தும், கதையும், களமும், இயக்கமும் சரியில்லாதது வருத்தம்! ஓபனிங் ஃபைட் சீனும், பாடல் காட்சிகளும் பிரமாதம்! பிரமாண்டம்!! க்ளைமாக்ஸில் நடிகர்சங்க போராட்டம் வலிய திணிக்கப்பட்டிருப்பது நாடகம்!

மொத்தத்தில் இலங்கை போராளிகளை கவுரவப்படுத்துகிறேன் பேர்வழி... என களமிறங்கி, இலங்கை இராணுவத்தை காட்டிலும் கொச்சைபடுத்தி இருக்கிறார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெய் ஆகாஷ்!

"ஆயுதப்போராட்டம்", ஆகாஷின் "போர்" ஆட்டம்!

திரை விமர்சனம்

மிட்டாய் 


Tamil Flim


நட்பிற்காக காதலியை விட்டுக் கொடுக்கவும், காதலை தியாகம் செய்யவும் தயங்காத நண்பர்களின் கலக்கல் கதைதான் "மிட்டாய்". கலங்க வைக்கும் க்ளைமாக்ஸை உள்ளடக்கிய கதையும் கூட "மிட்டாய்" என்பது மிரட்டல்!

ஊதாரியாக, காதலி கிடைத்ததும் உயர்பவராக கதையின் நாயகர் சூர்யாவாக, நடிகர் சந்தோஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். ஒரு காதல் செய்வீர், திருரங்கா, உள்ளிட்ட இவரது முந்தைய படங்களில் நடித்திருந்ததை காட்டிலும் மிட்டாயில் மிளிர்ந்திருக்கிறார். உடம்பை சற்றே குறைத்தால் இன்னும் உயரத்தை எட்டலாம் இவர். கதையின் மற்றொரு நாயகராக சந்தோஷின் நண்பராக வரும் பிரபாவும் பிரமாதம். நட்பிற்காக காதலையே தியாகம் செய்ய துணியும் இவரது பாத்திரம் புதுமை!

கதையின் நாயகி பூஜாவாக, புதுமுகம் மாயா உன்னி, குடும்ப குத்து விளக்கு எனும் அளவிற்கு ரொம்பவும் ஹோம்லி! நடிக்கவும் செய்து நன்றாகவும் இருக்கும். அம்மணியை, தமிழ் சினிமாவில் ரொம்பவே எதிர்பார்க்கலாம்! படத்தில் அவரது பெயருக்கு முன் தரப்பட்டிருக்கும் "தேன் மிட்டாய்" எனும் அடைமொழி மாதிரியே இனிக்கிறார்.

மகாநதி சங்கர், சிங்கமுத்து, நெல்லை சிவா, சாம்ஸ், பூச்சி செந்தில், லொள்ளுசபா சாமிநாதன், மீரா கிருஷ்ணன், சேது பாரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால் யாரும் பெரிதாக மின்னாதது "மிட்டாய்" படத்தின் பலவீனம்!

சபேஷ் முரளியின் இசை, நாக கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டும் "மிட்டாய்" படத்தை கொட்டாவி விட வைக்காமல் பார்க்க வைப்பது பலம், பலவந்தம். மந்திரம், மாயாஜாலம் எல்லாம்!. இயக்குநர் அன்பு அருள்நிதி, பாரதிராஜாவின் சிஷ்யர் என்பதாலோ என்னவோ, "அடி ஆத்தாடி..." எனும் குருநாதரின் "கடலோர கவிதைகள்" படப்பாடலை ஹீரோயினுக்கு பதில் ஹீரோவை ஆடவிட்டு ரீ-மிக்ஸ் செய்து இருக்கிறார்.

இந்த இனிமையும், க்ளைமாக்ஸ் புதுமையையும் படத்தின் பிற காட்சிகளிலும், குறிப்பாக முன்பாதி காட்சிகளில் புகுத்தியிருந்தால் "மிட்டாய்", தேன்மிட்டாயாக இனித்திருக்கும். அப்படி இல்லாததால், "பாதி புளிப்பு மிட்டாய்", "மீதி தேன் மிட்டாய்" ஹீ... ஹீ...!