Tuesday, 26 July 2011
Thursday, 21 July 2011
ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைத்தாரா நித்யானந்தா?

வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார். அதை தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.
நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.
அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங்கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்! என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.
இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.
இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில் பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.
ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம் என்பதுபோல சைகை காட்டினார்.
அடுத்த நிமிடம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா.
இதை பார்த்த ஒரு நிருபர், என்னையும் மிதக்க வைக்க முடியுமா? என்று கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’ என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.
நிர்வாண பூஜை!! இந்திய சாமியார் கைது!!
இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை என்ற ஊரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வயது 32 , இவர் இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
அந்த வீட்டில் வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக வசூளிந்துள்ளார்.
இவரைச் சந்திக்க பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்துள்ளனர். இவர் அந்த பெண்களிடம் தோஷம் இருக்கின்றது, அதை கழிக்க வேண்டும் என கூறுவார்.
இதற்காக தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். அங்கு அந்த பெண்களை நிர்வாண பூஜை செய்யவேண்டும் அப்போதுதான் உனக்கு பிடித்த தோஷம் போகும், உன்குடும்பம் வளம்பெறும் என்று பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவார்.
பின்னர் பெண்களை நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி சில மந்திரங்களை சொல்லி பூஜைகள் செய்வார் . பின்னர் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வார்.
இவரால் பலபெண்கள் சீரழிக்கப் பட்டுள்ளனர். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூவர் போலீஸ் இல் புகார் கொடுத்ததை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமியை கற்பழித்த 150க்கு அதிகமான காமக்கழுகுகள்!
சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், பிரபல தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சிறுமியிடம் செக்ஸ் வைத்தது தெரியவந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகாவிலும் பல விஐபிக்களின் பெயர் இதில் அடிபடுகிறது.
சினிமா பிரபலங்களின் உதவியுடன் அந்த சிறுமியை சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் சுதீர் நடிக்க வைத்தார். பின்னர், துணை நடிகை என்று சொல்லி விபசார புரோக்கர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது சமீபத்தில் அம்பலமாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி என்பதால் இதை பலாத்கார வழக்காக பதிவு செய்து கேரள மாநிலம் பரவூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
கடும் விசாரணையில் தந்தை சுதீர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் முதலில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை சீரழித்த முக்கிய பிரபலங்கள் பெயர் பட்டியல் போலீசுக்கு கிடைத்தது.
இதற்கிடையே சிறுமியை குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்ற கான்ட்ராக்டர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள தனது கெஸ்ட்ஹவுசில் வைத்திருந்தார் என்று தெரியவந்தது.
சிங்கப்பூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்த மணிகண்டனை சென்னை ஏர்போர்ட்டில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிஜோ அலெக்ஸாண்டர் தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். சிறுமி உள்பட பலரையும் அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் 150 பேர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடன் இருந்தவர்களை நன்றாக ஞாபகம் இருப்பதாக மாணவி ( 9ம் வகுப்பு) கூறியுள்ளார். தங்கியிருந்த லாட்ஜ், பங்களா, கெஸ்ட்ஹவுஸ் ஆகியவற்றையும் கூறுகிறார். அவர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Wednesday, 20 July 2011
வேங்கை
இரண்டரை மணிநேர என்டர்டெயின்மெண்டுக்கு ஹவரி ஒரு ஃபார்முலா வைத்துள்ளார். ஒரு மாதிவரி குடும்பம். கண்டிப்பான அப்பா, வீடு நிறைய சொந்தங்கள், வீரம் நெறைஞ்ச பிள்ளை, அவனுக்கொரு காதல், அநீதிக்கென்றே வளர்க்கப்படும் வில்லன். இது கதாபாத்திரங்கள். மண்ணெண்ணையைவிட பெட்ரோல் சீக்கிரம் பத்திக்கும், நாலு விரல்ல அரிவாளை பிடிக்கணும் என்பது மாதிவரிநுணுக்க விவரங்கள், திணடுக்கல்லயிருந்து தேனி வர்றவனை எப்படி மடக்கணும் என்று டீட்டெயில்; கெட்ச் போடுவது, டாடா சுமோக்கள்... அரிவாள்... அடியாள்... இத்யாதி. எல்லாமே வேங்கையிலும் உண்டு.
ஊர்ப் பெரியவர் ராஜ்கிரண் ஆதரவில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் பிரகாஷ்ராஜ்.சுரண்டல் பேர்வழி. அவருக்கு சுவராக இருக்கிறார் ராஜ்கிரண். அவரின் மகனைப் போட்டால் புத்திர சோகத்தில் போய்விடுவார் என்று ராஜ்கிரணின் மகன் தனுஷுக்கு குறி வைக்கிறார்கள். விஷயம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது. உன் தலையை எடுப்பேன் ராஜ்கிரணிடம் பிரகாஷ்ராஜும், பிரகாஷ்ராஜ்டம் தனுஷும் சவால்விடுகிறார்கள். இறுதி முடிவு எல்லோருக்கும் தெரிந்தது.
நடிகர்கள் மாறியிருக்கிறார்களே தவிர காட்சி அமைப்பிலும், கதாபாத்திரங்களின் குணத்திலும் மாறுதல்களில்லை. ராஜ்கிரண் வந்து நின்றாலே அவரது பாத்திரம் நிறைந்து விடுகிறது. அந்தளவுக்கு அவர் ஏற்கனவே நடித்த கதாபாத்திரம். தனுஷிடமும் எந்த ஆச்சரியமும் இல்லை. அவரளவுக்கு இருக்கிறது அவரிவாள். அதை எடுத்து வீசும் போது நமக்கு வியர்க்கிறது. பிரகாஷ்ராஜ் தேடி வந்து பருப்பு டயலாக் பேசுகையில் வெறுப்புதான் மிஞ்சுகிறது.
படத்தின் ஒரே குளிர் பிரதேசம், தமன்னா. தனுஷை தெரியாது என்று காண்பிக்க மலையாளத்தில் பேசுவதும், தொடையில் காயத்தை பார்த்தியா என்று தோழி கேட்டதும் அதிர்ச்சியில் அவளை பார்ப்பதும்.. ஹைக்கூ. சாமிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் நாயகி படம் நெடுக வருகிறார். அதற்காக அவரையும் வில்லியாக்கி தனி எபிசோட் செய்திருப்பது அதிர்ச்சிக்குப் பதில் அதிருப்தியே தருகிறது.
மந்திவரி ஒருவர் எதிவரியின் வீட்டில் கள்ள நோட்டு வைப்பதெல்லாம் காலாவதியான கற்பனை. கலேஜில் ரவுடிகள் செய்யும் அட்டகாசத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படியே நடித்தால் பிரகாஷ்ராஜ் நிஜத்திலும் வில்லனாகிவிடுவார். சுண்டக்காய் தனுஷை நசுக்க இந்த சூரப்புலி திணறும் போது சே என்றாகிவிடுகிறது இவரின் கேரக்டர். ஹீரோ ஓமக்குச்சி என்றால் ஒபாமாவும் பயந்துதானே ஆகணும்.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் வேகமான படம் என்ற உணர்வை தருகின்றன. இசை பரவாயில்லை. பாடல்களும் அப்படியே. ஹரியின் காதல, சென்டிமெண்ட், ஆக் ஷன் ஃபார்முலா இந்தமுறை கொஞ்சம் சறுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜனங்களுக்கு பிடித்த மாதிரி படம் பண்ணுவதுதான் எனது நோக்கம் என்கிறார் ஹரி. லாஜிக் மீறாத யதார்த்தம்தான் இப்போதெல்லாம் ஜனங்களுக்குப் பிடிக்கிறது. வேங்கை வெற்றுப் பாய்ச்சல்
தேநீர் விடுதி விமர்சனம்

இதில்தான் சோதனையே. ஒரு காட்சியை எப்படி கம்போஸ் செய்வது என்ற அடிப்படையே இயக்குனருக்குத் தெரியவில்லை. கேமரா முகத்துக்கு நேராக வந்ததும் சுவிட்ச் போட்ட மாதிரிஎல்லோரும் திடுக்கிட்டு நடிக்கத் தொடங்குகிறார்கள். காட்சிகளை எடுத்திருக்கும் விதம் படு செயற்கை.
ஒரு கதாபாத்திரம் ஃபோனில் பந்தல்காரனுடன் பேச வேண்டும். இந்தக் காட்சியை இயக்குனர் எப்படி எடுத்திருக்கிறார் பாருங்கள். ஃபோனில் பேசும் முன் கையிலிருக்கும் விசிட்டிங் கார்டைப் பார்த்து, ம்... பந்தல்காரனுக்கு ஃபோனைப் போடுவோம்... ரொம்ப நல்லா பந்தல் போடுவானுங்க என்று அந்த கதாபாத்திரம் உரக்க சொல்லிக் கொண்டு தனக்குத்தானே தலையாட்டிக் கொள்ளும். என்ன கொடுமை இது? இதேபோல் படம் நெடுக அபத்தங்கள் விரவிக் கிடக்கின்றன.
ஹீரோ ஆதித்துக்கு குச்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் திங்கிற முகம். எந்தக் காட்சியிலும் இந்த முகத்தை அவர் மாற்றவேயில்லை. நாயகி ரேஷ்மி அழகாக இருக்கிறார். நடிப்பும் வருகிறது. ஆனால் எல்லாமே பிளாஸ்டிக் காட்சிகள். எப்படி நடிப்பது?
ஹீரோ முதலில் நாயகியின் தந்தையை குடிக்க வைக்கிறான், பிறகு நாயகி வயதுக்கு வந்ததாக பந்தல் போடுகிறான். நாயகிக்கு நாயகன் மேல் கடும் கோபம். அவனை துரத்திப் பிடித்து அடிப்பார் என்று பார்த்தால் வெட்கத்துடன், நான் வயசுக்கு வந்திட்டேன்னு எப்பிடி தெரியும் என்று கேட்கிறாள். இதே போல் படத்தில் வரும் அனைவரும் ஏதோ ஒன்று கழண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அமெரிக்க மாப்பிள்ளை என்று ஒருவரை காட்டுகிறார்கள். கடவுளே... தமிழ் திரையுலகம் பார்க்காத கேரக்டர். அதையே கிளைமாக்ஸ் வரை அவ்வப்போது காட்டி கதற வைக்கிறார்கள். பத்தாவது காட்சியில், என்னை அவமானப்படுத்திட்டேயில்லை என்று சீறும் கதாபாத்திரம் அத்தோடு தொடர்புவிட்டு போய் கிளைமாக்ஸில், உன்னையும் அவமானப்படுத்துறேண்டா என்று மீசை தடவும் போது நம்ம ஜட்ஜ்மெண்ட் தப்பு என்பது உறுதியாகிவிடுகிறது.
நாயகியின் தந்தை தன்னை கொளுத்துவதுக்குப் பதில் பந்தலை கொளுத்துவதும், நாயகன் திடீரென மலைக்கு மாலை போடுவதும் அதிர்ச்சிகரமான திருப்பங்களாக இயக்குனர் நினைத்தால் அய்யோ பாவம்... நீங்க டெண்ட் கொட்டாயைவிட்டே இன்னும் வெளியே வரலை.
படத்தின் பின்னணி இசை எந்தவொரு காட்சியிலும் சிங்க் ஆகாமல் தனித்தே ஒலிக்கிறது. பாடல்கள் மட்டும் கேட்கலாம் ரகம். பூ படத்தின் சூச்சூ மாரி பாதிப்பால் இரண்டு பாடல்களில் தேவையேயில்லாமல் சிறுவர்களை பாட விடுவது பெரும் வதை.
சினிமா என்பது கலை. அதன் சிரசு இயக்கம். இரண்டு படங்களுக்கு இசையமைத்த தகுதியில் படம் இயக்கும் திறமை வந்துவிட்டதாக நினைத்தால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதற்கு இப்படம் சான்று.
Tuesday, 12 July 2011
ஹெல்த் ஜூஸ்-தயாரித்தல « உங்களுக்காக
ஸ்ஸ்ஸ்… வெளியிலப்போனா வெயில் மண்டையைப் பிளக்குதுப்பா… உசிரே போய்டும் போலிருக்கு என்று கோடை காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே இதுபோன்ற திட்டல்களும், முனகல்களும், புலம்பலாக உருவெடுப்பது சகஜம்தான். அப்படிப் புலம்பிதான் என்ன செய்வது? வெயிலைத் திட்டினால்கூட கோபித்துக்கொண்டு ரோஷத்தோடு வராமல் இருந்து விடுமா என்ன? அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டத்தின் மூலம்தான் தடுத்துவிட முடியுமா? ஸ்ஸ்ஸ்… முடிய்ய்யல. சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க என்று வடிவேல் பாணியில் நீங்கள் புலம்புவது புரிகிறது.
தோல் அலர்ஜி, முக வறட்சி, உடல்சோர்வு, வேர்க்குரு, தொற்றுநோய்கள், சிறுநீரக பிரச்னைகள், கண்ணில் கட்டி, அம்மை நோய் என பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து நம் உயிருக்கே உலை வைக்க கொலை வெறியோடு நிற்கிறது கோடை வெயில். அரசாங்கத்தின் மூலம் பொலிவுஷனை கன்ட்ரோல் பண்ணும் ஐடியாக்கள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், இதுபோன்ற நோய்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொண்டு கோடை கால வெயிலை குளு குளு ஹெல்த் ஜூஸ்களோடு கொண்டாட ருசிக்க வைக்கும் ரெசிபிகளோடு ரெடியாக இருக்கிறார் சமையல் கலை வல்லுநர் லதாமணி ராஜ்குமார். ஜூஸ் மட்டும் போதுமா? அந்த ஜூஸில் என்னென்ன சத்துகள் நிரம்பியிருக்கின்றன? யாரெல்லாம் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் கன்சல்டிங் நியூட்ரிஷியனிஸ்ட் & ஆராய்ச்சி வல்லுநர் சந்திரா பவுலின் தினகரன் கூறும் ஆலோசனைகளும் ஒவ்வொரு ஜூஸுடனும் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடைகளில் கிடைக்கும் பலவிதமான ஜூஸ்களை வாங்கிக் குடித்துவிட்டு உடம்பை ரணகளமாக்கிக் கொள்ளாமல், வல்லுநர் சொல்லும் ஹெல்த் ஜூஸ்களைச் செய்து சாப்பிடுங்கள். கோடைகாலத்தில் குதூகலம் பொங்கட்டும்!
- சன்ஷைன் ஜூஸ்
தேவையான பொருட்கள்
கேரட் _ அரை கிலோ, வெள்ளரி _ 100 கிராம், தக்காளி _ 100 கிராம், வெள்ளை மிளகு _ அரை டீஸ்பூன், உப்பு _ 2 சிட்டிகை, கருப்பட்டி_50 கிராம், எலுமிச்சம்பழச்சாறு_10 அல்லது 12 துளிகள்.
செய்முறை
முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின்_ஏ சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும். வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் திக்கான சன் ஷைன் ஜூஸ் ரெடி. தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ். பெண்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் வெறும் வயித்துல சாப்பிடுவதுதான் பெட்டர். ஆனால் சுகர், பி.பி. உள்ளவர்கள் வெறும் வயித்துல சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சுகர் பேஷண்ட்டுகள் கருப்பட்டிக்கு பதிலாக சுகர்ஃபிரீ, போட்டு சாப்பிடலாம்.
டயட்
கேரட்ல விட்டமின்_ஏ ஜாஸ்தி. இதுல ஃபைட்டோ கெமிக்கல்ஸ் இருக்கிறதால நம்ம உடம்புல உள்ள செல்களுக்கு பாதிப்பு வராமல் பாதுகாத்துக்க முடியும். கருப்பட்டியில் _ அயர்ன் இருக்கிறதால சத்துக்குறைவு (இரத்த சோகை) பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கலாம். வெள்ளரியில தண்ணீர் சத்தும் நார்ச்சத்தும் இருப்பது உடம்புக்கு நல்லது. பொதுவாக எல்லாப் பழவகைகளையும் அப்படியே சாப்பிடுறதுதான் நல்லது. ஆனா கோடை வெயில் இந்த அளவுக்கு சுட்டெரிக்கிறதால நம்ம உடம்புல இருக்கிற நீரும், உப்பும் வெளியாகிறது. அதனாலதான் பழங்களை ஜூஸா சாப்பிடவேண்டியிருக்கு. சர்க்கரையை விட வெல்லம் நல்லது. டயாபடீஸ்காரங்க எந்த ஸ்வீட்டும் ஜூஸ்ல கலக்காம பழத்துல இருக்கிற நேச்சுரல் சுவீட்டோட சாப்பிடுறதுதான் நல்லது.
- லெமன் ஜூஸ்
இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும்.
தேவையான பொருட்கள்
பார்லி _ கால்கிலோ, எலுமிச்சம்பழம்_2, மாங்காய் இஞ்சி_50, கிராம், உப்பு_2 சிட்டிகை, சர்க்கரை 100 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் ஒரு க்ளாஸுக்கு ஒரு டேப்ளட்)
செய்முறை
பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும். இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.
டயட்
பார்லியில சிறுநீரக பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கிற வல்லமை இருக்கு. எலுமிச்சம் பழத்துல சி விட்டமின் இருக்கு. டென்ஷனை விரட்டி மனசை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள எலுமிச்சம்பழம் ரொம்பவும் துணைபுரியுறதா தற்போதைய மருத்துவ ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. ப்ளட் பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்தது.
- தர்பூஸ் மசாலா மோர் ஜூஸ்
கோடை காலத்தில் தர்பூஸ் சாப்பிட்டாலே ஜம்மென்று இருக்கும். அதுவே தர்பூஸ் மசாலா மோர் என்று புதிதாக தயார் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
தேவையான பொருட்கள்
தர்பூசணி பழம் _ அரை அளவு, இஞ்சி _ 25 கிராம், புதினா _ கைப்பிடி அளவு, எலுமிச்சம்பழம் _ பாதியளவு, பெருங்காயம் _ கால் டீஸ்பூன், ரெகுலர் மிளகு _ கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு 100 கிராம், உப்பு _ 1 சிட்டிகை.
செய்முறை
முதலில் இஞ்சி, புதினாவையும் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள் அடியில் தங்கி விடும். அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி ஜூஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள். தர்பூஸ் மசாலா மோரின் ஆரோக்கிய சுவை தெரியும். ஆனால், இதைப் பதப்படுத்தியெல்லாம் வைக்க முயற்சி செய்யாதீர்கள். 24 மணி நேரம்தான். தர்பூசணி மசாலா மோரின் வேலிடிட்டி.
டயட்
தர்பூசணி (வாட்டர் மெலன்) பழத்துல தண்ணீர்ச் சத்து நெறைய அடங்கியிருக்கு. விட்டமின் ஏ சத்தும் இருக்கு. இந்தப் பழத்துல இருக்குற ஃபோலிக் ஆஸிட் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். சுகப்பிரசவம் ஆகவும் துணைபுரிகிறது. கருப்பட்டியில் அயர்ன். பெருங்காயம் ஜீரண சக்திக்கு ஏற்றது.
- ஃபருட் பஞ்ச் ஜூஸ்
பஞ்ச் பழங்களை ஸாரி… அஞ்சு பழங்களை மிக்ஸ் பண்ணி செய்வதால்தான் ஃப்ரூட்பஞ்ச். தேவையான பொருட்கள் பப்பாளி_100 கிராம், மேங்கோ_100 கிராம், ஆரஞ்சுப்பழம்_100 கிராம், திராட்சை_100 கிராம், எலுமிச்சம்பழம்_பாதியளவு, சோடா (கோலிசோடா அல்லது ஸ்பிரிட்), சுகர்_200 கிராம், வாட்டர் 10 மில்லி, உப்பு _ 1 சிட்டிகை.
செய்முறை
எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும். இல்லையெனில், பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக கட் பண்ணிக்கொண்டு சுகரையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் ஃப்ரூட் பஞ்ச் ரெடி. குழந்தைங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. ஃபிரிஜ்ஜில் வைத்து எல்லோரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி மகிழலாம்.
டயட்
பப்பாளியில் ஏ விட்டமின் அதிகம். ஆரஞ்சுல_சி விட்டமின், பப்பாளியைத் தவிர மீதி நான்கு பழமும் சிட்ரஸ் ஃபுரூட்ஸ். (சிட்ரஸ் அமிலம் நிறைந்தது)
- கிரேப்ஸ் டிலைட் ஜூஸ
தேவையான பொருட்கள்
கருப்பு திராட்டை 1/4 கிலோ, டோனமின் எசன்ஸ்_அரை டீஸ்பூன், சுகர்_200 கிராம், எலுமிச்சம் பழம்_ பாதி அளவு, தண்ணீர் _ 100 மி.லி, சோடியம் பென்சமைடு (எஸ்.பி.பவுடர்) _ 1 சிட்டிகை.
செய்முறை
திராட்சையின் விதையை நீக்கிவிட்டு அப்படியே வேக வைக்கவும். ஒயின் மாதிரியான கலரில் இருக்கும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து ஆற வைக்கவும். தண்ணீரில் சர்க்கரையைச் சேர்த்து தனியாக கொதிக்க வைத்து அதில் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும். ஆறிய சர்க்கரைத்தண்ணீருடன் ஆறியிருக்கும் திராட்சை ரசத்தையும் சேர்த்து டோனமின் எசன்ஸை கலக்க வேண்டும். இந்த எசன்ஸை கலப்பதில் ஓர் சிறிய கண்டிஷன். அப்படியே கலக்காமல் ஆறின தண்ணீரில் கலந்து பிறகுதான் ஜூஸில் கலக்க வேண்டும். பிறகு கண்ணாடி பாட்டிலுக்குள் ஊற்றி வைத்துக் கொண்டால் போதும். நீங்கள் மட்டுமல்ல. உங்கள் உறவினர்கள், விசிட்டர்ஸ் யார் வந்தாலும் கால் கிளாஸுக்கு முக்கால் க்ளாஸ் தண்ணீரைக் கலந்து தாராளமாய் எந்த நேரத்திலும் பருகலாம். பாட்டிலை ஃப்ரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை.
டயட்
கருப்பு திராட்சையில்&ஏ விட்டமின் இருக்கு. அயர்ன் சத்து (இரும்புச்சத்து) நிறைந்தது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது. அப்பவே செய்து உடனே சாப்பிடணும். சோடியம் பென்சமைடு (எஸ்.பி.பவுடர்) தேவையில்லை. ஆனா பல நாட்கள் பாதுகாத்து வைத்திருக்கவேண்டுமானால் ஒரு சிட்டிகை போடலாம்.
- ஆரஞ்ச் ஜிங்கிள்ஸ் ஜூஸ
தேவையான பொருட்கள்
ஆரஞ்சுப்பழம்_6 (கமலா, சாத்துக்குடியாகக் கூட இருக்கலாம்) சுக்கு_சிறிது, குளுக்கோஸ2 டேபிள் ஸ்பூன், உப்பு1 சிட்டிகை.
செய்முறை
ஆரஞ்சுப்பழத்தைத் தோல் நீக்கி, சுளையை தனியாக எடுத்துக் கொண்டு, சுக்கு+உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். (அதிக நேரம் மிக்ஸியில் அரைத்தால் துவர்ப்புச் சுவை கூடி விடும்) ஆரஞ்சுப்பழத்திலேயே தண்ணீர் இருப்பதால், தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. குளுக்கோஸ் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பரான எனர்ஜி ஃபுட் இதுதான் என்பீர்கள். எந்த நேரத்திலும் பருகலாம்.
டயட்
விட்டமின்_சி அடங்கியிருக்கு. அதுக்குமேல இதுல இருக்குற கொலாஜன் இரத்த ஓட்டம் சரியானபடி இருக்கவும், நம்ம உடம்புல எந்தவிதமான நச்சுக்கிருமிகள் தாக்காமல் இருக்கவும் உதவியா இருக்கும். இரத்த சோகை உள்ளவங்க சாப்பிட்டா அயர்ன் சத்து நம்ம உடம்புல சேர்ந்து செயல்பட இது துணை புரியுது. மேலும் கிட்னியில கல் உருவாகாம இருக்கவும் பாதுகாப்பு வளையமா இருக்கு. காலையில உணவு சாப்பிட்டதும் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிடறது ரொம்பவும் நல்லது. பெயரைக் கேட்கும்போதே சும்மா நாக்கில் நீர் எகிறுகிறது. சாப்பிட்டுப் பார்த்தா?
- ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
தேவையான பொருட்கள்
பால் ரெண்டு கிளாஸ் (உங்கள் வீட்டுகிளாஸ் பெரிய டபரா அளவுக்கோ அல்லது கோலா பானங்களின் மூடி சைஸுக்கோ இருக்கலாம். ஆனால் ஒரு கிளாஸ் என்பதை 200 மி.லி. அளவாகத்தான் நீங்கள் அர்த்தம் கொள்ள வேண்டும்!) ஸ்ட்ராபெர்ரி_4, சர்க்கரை_100 கிராம், பாலாடை க்ரீம்_கொஞ்சம், ஐஸ்கட்டி_15 துண்டுகள், ரோஸ்எசன்ஸ்_அரை டீஸ்பூன்.
செய்முறை
பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொண்டு அதில் பாலை ஊற்ற வேண்டும். அதோடு சர்க்கரையையும் ஐஸ் கட்டியையும் சேர்த்து மிக்ஸியில் மூன்று முறை அரைக்க வேண்டும். நுரை பொங்கிய நிலையில் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார். ஒருவேளை ஸ்ட்ராபெர்ரி பழம் கிடைக்கவில்லை எனில், அதற்குப் பதிலாக சப்போட்டாப்பழம் இரண்டைச் சேர்த்து அதே செய்முறையோடு தயார் செய்யுங்கள் சப்போட்டா மில்க் ஷேக் ரெடி! நுரை பொங்கியபடியே சாப்பிட்டால்தான் டேஸ்ட் இல்லையென்றால் வேஸ்ட்.
டயட்
எல்லா ரெட் கலர் பழங்களிலேயும் லைக்கோடின் சத்து அடங்கியிருக்கு. நம்ம உடம்புல இருக்கிற இரத்தத்திலேயும் ஐம்பது சதவீதம் அடங்கியிருக்கு. இது 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாத்தான் சத்துக்குறைவு, இரத்த சோகை நோய்களெல்லாம் வருது. (பழத்தோலை உரிச்சா ரெட் கலர்ல இருக்கும்) ரெட்கலர் பழங்களைச் சாப்பிடுவதால் இப்பிரச்னைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதில் நார்ச்சத்து அடங்கியிருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைகள் ஃப்ளைட் ஏறி பறந்து விடும். கர்ப்பிணிப் பெண்கள் விரும்பிச் சாப்பிடலாம்.
- பலாப்பழம் நெக்டார் ஜூஸ்
தேவையான பொருட்கள்
பலாப்பழம் _ 15 சுளை, வெல்லம் _ 100 கிராம், தேன்_2 டேபிள் ஸ்பூன், 3 டம்ளர் தண்ணீர்.
செய்முறை
பலாச்சுளைகளை இட்லி குக்கரில்வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆறவைத்து பலாப்பழத்துடன் தேனையும் வெல்லத்தையும் கலந்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். சிலர் இதில் பால் கலக்கலாமா என்று கேட்பதுண்டு. இதில் பால் கலக்கத் தேவையில்லை. அப்படிக் கலந்தால் சாப்பிடுவது அப்படி நெஞ்சிலேயே நிற்பது மட்டும் அல்லாமல் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். எனவே இதற்கு தேன் கலப்பதுதான் பெஸ்ட். ஃபிரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை. பாட்டிலில் வைத்துக் கொண்டால் போதும். மேக்ஸிமம் காலை நேரங்களில் பருகுவதுதான் பெஸ்ட்.
டயட்
மஞ்சள் நிறப் பழமா இருக்கிறதால ஃபைட்டோ நிறைந்த ஏ விட்டமின் ஜாஸ்தியிருக்கும். விட்டமின் மற்றும் மினரல்ஸ் நிரம்பியது. தேன் மலச்சிக்கல் தீர்க்கும் குணம் வாய்ந்தது. வாழைப்பழமும் சத்து நிறைந்தது. ஆனால் மூன்றுமே இனிப்பு ஜாஸ்தியாக இருப்பதால் டயாபடீஸ்காரர்கள் அறவே தவிர்ப்பது நல்லது.
- சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்
தேவையான பொருட்கள்
விதை நீக்கிய சீதாப்பழம் _ 100 கிராம், சுகர் _ 200 கிராம், தண்ணீர் _ 100 மி.லி. எலுமிச்சம்பழச்சாறு _ 2 அல்லது 3 துளிகள், பால் _ தேவையான அளவு,
செய்முறை
விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது. சீதாப்பழத்திற்குப் பதில் நாகப்பழத்தையும் சேர்த்துச் செய்தால் நாகப்பழம் மில்க் ஷேக்!
டயட்
ஸ்வீட் அதிகமுள்ள ஏ விட்டமின் பழம். பாலில் புரோட்டின் + கார்போ ஹைட்ரேட் உள்ளது. வெயிட் போடணும்னு நெனக்கிறவங்க இந்தப் பழ ஜூஸை நெறைய சாப்பிடலாம். மசில்ஸ் எல்லாம் நல்லா வளரும். பாடி பில்டர்ஸ் இதை நெறைய விரும்பிச் சாப்பிடக்கூடியது. அதைவிட முக்கியமா ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் உள்ளவங்ககூட இந்த ஜூஸை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது. டயாபடீஸ்காரங்க சர்க்கரைன்னு வர்ற இடத்தில குறைவா இருந்தா வெல்லமோ, நெறைய இருந்தா ஷுகர் ஃபிரீயோ கலந்து சாப்பிடறதுதான் பெட்டர். அத்திப்பழம் காய்ந்ததை விட பழத்தின்விலை கம்மிதான். ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய ஜூஸ். ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு (இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது.
- அத்திப்பழம் குலாபி ஜூஸ்
தேவையான பொருட்கள்
அத்திப்பழம் _ கால் கிலோ, பனங்கற்கண்டு _200 கிராம், குளுக்கோஸ்_1 டீஸ்பூன், பிங்க் கலர் ரோஜா, தேன் _1 டீஸ்பூன், பால் அல்லது தண்ணீர்.
செய்முறை
அடுப்பில் வைத்தெல்லாம் எதுவும் வேக வைக்கத் தேவையில்லை. மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் கலந்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். அடியாத்தி… அத்திப்பழ குலாபி இதுதானான்னு ஆச்சர்யப்படுவீர்கள்.
டயட்
அத்திப்பழம் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமா சாப்பிடணும். சோர்வா இருக்கும் போது சாப்பிட்டா சட்னு சுறுசுறுப்பு வந்து ஐ ஆம் ஏ அத்திப்பழம் கேர்ள்னு சொல்வீங்க. ஆனா, எல்லாருமே சாப்பிடலாம்.
- ஜல் ஜூராபாணி ஜூஸ்
பானிப்பூரி கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன ஜல்ஜீராபாணி? என்கிறீர்களா? இது ஜீரணசக்தியைக் கொடுக்கும் ஜகஜ்ஜால ஜல் ஜீராபாணி.
தேவையான பொருட்கள்
சீரகம் _ 30 கிராம், வெல்லம் _50 கிராம், ஏலக்காய் _2, பட்டை_ 2, வால் மிளகு _2, தண்ணீர் _50 மி.லி. எலுமிச்சம் பழம் _ கால் பழம்.
செய்முறை
முதலில் சீரகம், வெல்லம், ஏலக்காய், பட்டை, வால் மிளகு அனைத்திலும் தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் அரைத்து பவுடராக வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு 50 மி.லி. தண்ணீரையும் எலுமிச்சம்பழச் சாற்றையும் சூடு செய்து ஆறிய பிறகு அப்படியே மிக்ஸியில் அரைத்து வைக்கப்பட்ட பவுடரைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் குடிக்கலாம். அதே நேரத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்போது கால் கிளாஸ் ஜூஸுடன் தண்ணீரைக் கலந்து சாப்பிடலாம். டயட் சாப்பாடு சாப்ட்டதுக்கப்புறம் சாப்பிட வேண்டிய ஜூஸ். விட்டமின்&சி அடங்கியிருக்கு. இதனால நல்லா ஜீரணம் ஆகிறது மட்டுமில்லாம உங்க முகத்துல இளமையும் அழகான களையும் மிளிரும்.
- மெடிக்கல் ஜூஸ்
தேவையான பொருட்கள்
புதினா _கைப்பிடி அளவு, துளசி _ கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை _கைப்பிடி அளவு, மிளகுத்தூள் _கால் டீஸ்பூன், சுக்குப் பொடி _ கால் டீஸ்பூன், உப்பு _ 1 சிட்டிகை, சர்க்கரை_ 200 கிராம், தண்ணீர் _100 மில்லி எலுமிச்சம் பழம் _ கால் பழம்.
செய்முறை
புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மெடிக்கல் ஜூஸ். அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.
டயட்
பெயரைப் படிச்சதும் ஏதோ நோயாளிகள் சாப்பிடுறதுன்னு நெனைக்க வேணாம். ஏன்னா இந்த ஜூஸ் நோய் வராம பாதுகாக்கும் ஜூஸ். புதினா, துளசி ரெண்டுலேயும் இரும்புச்சத்து அதிகம். சளித்தொல்லையை அடித்து விரட்டக் கூடியது. குழந்தைகளுக்கு வாரத்துக்கொருமுறை கொடுத்தால் போதும். கற்பூரவல்லி இலையை ஜூஸ் செய்தோ அல்லது 3 இலை ஒருநாளைக்கு எனச் சாப்பிட்டு வந்தாலே அப்புறம் சளின்னா என்னன்னு கேட்பாங்க.
- தண்டால் ஜூஸ்
என்ன, பெயரே வித்தியாசமாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? இந்த ட்ரிங்க்ஸ் குஜராத்துல ரொம்ப ஃபேமஸ்.
தேவையான பொருட்கள் பாதாம் _ 100 கிராம், பிஸ்தா_100 கிராம், முந்திரி_50 கிராம், உலர்ந்த திராட்சை_50 கிராம், பேரீச்சம்பழம்_50 கிராம், அத்திப்பழம் _50 கிராம், இதோடு மூன்று விதமான பழங்கள். உதாரணம்: ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம், மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ்_2 டீஸ்பூன்.
செய்முறை
பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உலர்ந்த அயிட்டங்களை அப்படியே அரைக்க முடியாது. எனவே காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம் இதோடு சர்க்கரையையும் தண்ணீரையும் கலந்து கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ் கலந்தால் திக்கான லிக்வுட் கிடைக்கும். மில்க் மெய்டு மாதிரி இருக்கும். இதை ஒல்லியாக இருக்கிற பெண்கள் பாலில் கலந்து இரவில் குடிக்கலாம். எனர்ஜிக்கு மட்டும் குடிக்கிறவர்கள் காலையில் அப்படியே குடிக்கலாம். திருமணம் நடக்கப் போகும் பெண்ணுக்கு குஜராத்தில் கொடுக்கப்படுவது வழக்கம். அயர்ன் விட்டமின் நிறைந்தது. அதே நேரத்துல அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஓவர் குண்டாகவும் வாய்ப்பு இருக்கிறது.
டயட்
டீன் ஏஜ் பெண்கள் விரும்பிச் சாப்பிட வேண்டிய ஜூஸ். இதைச் சாப்பிட்டா இளமைக்குத் திரும்பிடலாம். அதுவும் இரத்த சோகை ஓடியே போய்டும்.
விட்டமின்_ ஈ சத்து நெறைய இருக்கு.
இந்த ஜூஸை பல நாட்கள் பாதுகாப்பாக வைக்க முடியாது. அன்றைக்கே செய்து அப்படியே குடித்தால்தான் ஓகே.
- கிர்ணிப் பழம் ஜூஸ்
தேவையான பொருட்கள்
கிர்ணிப் பழம் _ 1, பனங்கற்கண்டு_200 கிராம், பட்டை_2, ஏலக்காய்_2, கிராம்பு_2,
செய்முறை
ரொம்ப சிம்பிள். முதலில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பழத்தின் மேல் தோலை நீக்கி (பாலோ, தண்ணீரோ சேர்க்கத் தேவையில்லை) பனங்கற்கண்டைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். அப்படியே சாப்பிடலாம். மதிய நேரங்களில் சாப்பிடுவது மிகுந்த பலன்.
டயட்
விட்டமின்_ஏ சத்து நிறைந்தது. டயட் இருக்கிறவங்களுக்கு ஆரோக்கியமான டயட்ஃபுட். கண்ணுக்கும், ஸ்கின்னுக்கும் நல்லபழம்.
- பைனாப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்
பைனாப்பிள் _ 1, சர்க்கரை _ தேவைக்கு, பைனாப்பிள் எசன்ஸ் _ 1 டீஸ்பூன், சிட்ரிக் ஆஸிட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம்.
செய்முறை பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) மேல் தோலை எடுக்க வேண்டாம். அப்படியே நான்கு துண்டாக கட் பண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு அதை கேரட் துருவுவது போல் துருவி விட்டு ஒரு மெல்லிய துணியில் பிழிந்து ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஜூஸானது 200 கிராம் அளவு இருந்தால், அதே அளவு (200 கிராம்) தண்ணீரில் கலந்து அதோடு இரண்டு மடங்கு (400 கிராம்) சர்க்கரையும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட வேண்டும்.
இதை அப்படியே குடிக்கக் கூடாது. கால் பங்கு ஜூஸுடன் முக்கால் பங்கு தண்ணீர் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் ஸ்கின் அலர்ஜிகளைத் தவிர்க்கலாம். டயட் விட்டமின்_ஏ சத்து அடங்கியது. மினரல், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் சத்துகள் அடங்கியது. சிட்ரிக் அமிலத்துக்கு பதில் எலுமிச்சம் பழம்தான் பெஸ்ட்&சி விட்டமின்) டயாபட்டீஸ் அன்பர்கள் உஷார்!
- மிக்ஸடு வெஜிடபிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்
கேரட் _100 கிராம், பீட்ரூட்_ 50 கிராம், கோஸ் _50 கிராம், தண்ணீர்_ 2 டம்ளர், இஞ்சி_ 1, புதினா _ கைப்பிடி அளவு.
செய்முறை
கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும், பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக் (சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு சீக்கிரம் மூன்றையும் ஒன்றாகவே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும். ஒரு கட்டி வெல்லத்தை அப்படியே போட வேண்டும். குடிச்சுப் பாருங்க மிக்ஸ்டு வெஜிடபுள் ஜூஸ். ஆரோக்கியம் தானா வரும்.
தேவையான பொருட்கள் கேரட்_ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது
